சொத்து தகராறில் மகனை கொலை செய்த தந்தை - குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரண்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 06:17 PM
புதுச்சேரியில் சொத்து தகராறு காரணமாக மகனை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி  வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் ரஞ்சித் , பிரெஞ்ச் குடியுரிமை பெற்று , மனைவியுடன் அங்கேயே வசித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுமுறைக்காக புதுச்சேரி வந்த ரஞ்சித் , தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வீட்டிற்கு குடித்து விட்டு வந்த ரஞ்சித் , தாயை தலையனையால் அமுக்கி தந்தை குமாரை மிரட்டியுள்ளார். ஆத்திரத்தில் குமார், பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் வீசியுள்ளார். மயக்கமடைந்த ரஞ்சித்தை , குமார் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் காவல்நிலையத்துக்கு சென்று செய்த குற்றத்தை ஓப்புக்கொண்டு குமார் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் , ரஞ்சித் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மக்களை பாதுகாக்க வேண்டும்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

129 views

பிற செய்திகள்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி மனு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 5,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7 views

கோயம்பேடுக்கு அடுத்து திருமழிசையா ? - காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி

திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்படுவதால் கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின் மையப் பகுதியாக திருமழிசை சந்தை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

20 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

6 views

"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.

32 views

"பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு"- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சதானந்த கவுடா விளக்கம்

தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

63 views

"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.