டெல்லி சட்டப்பேரவை கட்டிடம் உருவான கதை
பதிவு : பிப்ரவரி 11, 2020, 04:48 PM
டெல்லி சட்டப்பேரவை கட்டிடம் உருவான விதம் குறித்த செய்தி தொகுப்பு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911 ஆம் ஆண்டு வரை  நாட்டின் தலைநகராக கொல்கத்தா இருந்தது. அதுவரை அந்நகரில்  இருந்த அரசு இல்லத்தில்தான் அன்றைய நாடாளுமன்ற கவுன்சில் கூட்டம் நடைபெற்று வந்தது.

* ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கான பழம்பெரும் பாரம்பரியத்திற்காகவும், புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகவும் டெல்லி அமைந்ததால் அதை நாட்டின் தலைநகராக மாற்றியமைத்தனர் ஆங்கிலேயர்கள்.

* இதைத்தொடர்ந்து டெல்லியில் நாடாளுமன்ற கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒரு கட்டடம் தேவைப்பட்டது. இதை வடிவமைக்கும் பொறுப்பு மான்டேக் தாமஸ் இடம் அளிக்கப்பட்டது. 

* பழைய தலைமைச் செயலகம் என அழைக்கப்படும், அலிப்பூர் சாலையில் அமைந்துள்ள தற்போதைய டெல்லி சட்டப்பேரவை கட்டடம், 1912-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, முதல் கூட்டம் 1913 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்றது. 

* 1926-ஆம் ஆண்டு வரை அப்போதைய மத்திய அரசின் கவுன்சில் கூட்டம் இன்றைய சட்டப் பேரவை கட்டடத்தில் தான் நடைபெற்றது.

* 1912- ஆம் ஆண்டு தொடங்கி 1920-ஆம் ஆண்டு வரை இருந்த ஆங்கிலேயே சட்டப்பேரவை கவுன்சில் கூட்டம், இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டடத்தில் தான் நடைபெற்றது. 

* அன்றைய காலகட்டத்தில்தான், பட்ஜெட், ரயில் கட்டணம், ரயில்வே சீர்திருத்தம் போன்ற முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

* ரௌலட் மசோதா தொடர்பான விவாதத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற நாடாளுமன்றவாதிகள் பங்கேற்று, ரௌலட் மசோதா, தனிநபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என முழக்கமிட்டு உரையாற்றினர். 

* அப்போது இந்த விவாதத்தை மாடத்திலிருந்து பார்ப்பதற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார்.

* தற்போது உள்ள நாடாளுமன்றம், கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய தலைமைச் செயலக கட்டடம் நீண்ட காலம் பயன்பாடற்று இருந்தது. டெல்லி சி பிரிவு மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் கட்டடம் செயல்பாட்டுக்கு வந்தது. 

* 1993-ஆம் ஆண்டு தொடங்கி டெல்லி சட்டப்பேரவை இந்த பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் தான் நடைபெற்று வருகிறது.

* 1912-ஆம் ஆண்டு தொடங்கி 1926-ஆம் ஆண்டு வரை, அப்போதைய மத்திய அரசின் அதிகார மையமாகவும், நாடாளுமன்றமாகவும் இப்போது உள்ள சட்டப்பேரவை கட்டடம் செயல்பட்டது. 

* வரலாற்று சிறப்புமிக்க டெல்லி சட்டப்பேரவையின் தற்போதைய செயலாளராக, தமிழரான சி. வேல்முருகன் பணியாற்றி வருகிறார்.

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

25 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

7 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

413 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1226 views

முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் அதிமுக

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

215 views

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : மாமல்லபுரம் காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் சிலரும், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள உள்நாட்டு பயணிகள் சிலரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.