ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் கொடுத்து கொலை - கேரளாவை உலுக்கிய வழக்கில் கடைசி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 09:01 AM
கேரளாவை உலுக்கிய 6 பேர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தை சேர்ந்த ஜாலி தாமஸ் என்ற பெண் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவன், இரண்டாவது கணவனின் முதல் மனைவி, குழந்தை உள்ளிட்ட 6 பேரை உணவில் விஷம் வைத்து கொடுத்து கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். கடந்த 2002 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த இந்த கொலைகள், போலீசாரின் தீவிர  விசாரணையில்  வெளி வந்து நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஜாலி தாமசை  கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், இவ்வழக்கில்  கடைசி குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தனர். அதில், நாய்க்கு நோய் உள்ளதாக கூறி கால்நடை மருத்துவரிடமிருந்து எழுதி வாங்கிய சீட்டு மூலம் டாக்கில் எனப்படும் விஷத்தை வாங்கி, மாமியார் அன்னம்மாவுக்கு ஆட்டுக்கால் சூப்பில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஜாலி தாமஸ், வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

380 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

279 views

பிற செய்திகள்

"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

24 views

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

12 views

"நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?"

நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

24 views

டெல்லி - ஹைதராபாத் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணியுடன் நேற்று நடந்த மோதலில், நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

47 views

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 views

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை - நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.