"பொருளாதாரம் மோசமாக உள்ளதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பதிவு : பிப்ரவரி 10, 2020, 01:00 PM
மாற்றம் : பிப்ரவரி 10, 2020, 02:26 PM
நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதாகவும், ஆனால் மத்திய பாஜக அரசு தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தில் பேசிய அவர், பண மதிப்பிழப்பு  கொண்டு வந்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்றார். ஆனால் அரசு தமது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும், ப.சிதம்பரம் புகார் தெரிவித்தார். பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை கூட  அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ப.சிதம்பரம் கூறினார். கடந்த 1991, 2008, 2013 - ஆம் ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதாகவும் அதனை, காங்கிரஸ் அரசு சிறப்பாக சமாளித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போதைய பொருளாதார மேலாளர்கள், தொடர்ந்து முந்தைய அரசை குறை கூறி  வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தால் பலன் இல்லை" - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல அது ஒரு லட்சம் கோடி தான் என்று, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

60 views

பிற செய்திகள்

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

20 views

மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.

8 views

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

15 views

"இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி ரத்து" - மத்திய அரசு

வென்டிலேட்டர்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் முககவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகாரணங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

20 views

தோற்று நோய் - புஷ் வகுத்து தந்த செயல் திட்டம் என்ன...?

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

11 views

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.