சீனாவுடன் நெருக்கமாக இருப்பது குறித்து இந்தியா அச்சப்பட தேவையில்லை - தினத்தந்திக்கு ராஜபக்சே சிறப்பு நேர்காணல்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 10:36 AM
நரேந்திர மோடி உடனான சந்திப்பின் மூலம் இந்தியா- இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.

* இந்தியா-இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டன.

* இந்த நிலையில் தினத்தந்தி நாளிதழிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில்  இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு,  பரஸ்பர வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாக தெரிவித்துள்ளார்.

* சீனாவுடன் நெருக்கமாக உறவு வைத்திருக்கிறீர்கள் என்கிற கவலை இருக்கிறதே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து இந்தியா அச்சப்பட தேவையில்லை என்று குறிப்பிட்டார்.  எதற்காக அஞ்ச வேண்டும் என்றும் இந்தியா பெரிய வலுவான நாடு என்றும் ராஜபக்சே குறிப்பிட்டார்.

* இந்தியா, இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்றும்,  தங்கள் நாட்டுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகவும் மகிந்த ராஜபக்சே  தெரிவித்தார்.

* மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் சட்டத் திருத்தம் அதாவது 13-வது அரசியல் சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக தெரிவித்த ராஜபக்சே, அந்த சட்டத்தை மாகாண கவுன்சில் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார்.  உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்றும் ராஜபக்சே தெரிவித்தார்.


பிற செய்திகள்

உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல் - எதிரிகளை கண்காணிக்க திட்டம்

தங்களின் எதிரிகளை கண்காணிக்க இஸ்ரேல் நாடு உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது.

212 views

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1440 views

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

1226 views

தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

103 views

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

30 views

சமையல் கற்கும் ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சமையல் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.