தாய், தம்பியை கத்தியால் குத்திய பெண் - மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார் விசாரணை
பதிவு : பிப்ரவரி 08, 2020, 08:24 AM
தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஆண் நண்பருடன் அந்தமானுக்கு இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 33 வயது அம்ருதா தாய் மற்றும் தம்பியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். திடீரென தம்மை ஹைதராபாத்துக்கு பணி மாறுதல் செய்துவிட்டதாக தாய் மற்றும் தம்பியிடம் கூறிய அம்ருதா தாம் அங்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து திங்கட் கிழமை அதிகாலை பீரோவை திறந்து தயாரானபோது சத்தம் கேட்டு எழுந்த தம்பி  உதவ முன்வந்துள்ளார். ஆனால் அவரை கத்தியால் குத்தியுள்ளார் அம்ருதா. அக்காவின் திடீர் செயலில் அதிர்ச்சியுற்ற தம்பி அலற அதைக்கேட்டு ஓடிவந்த தாயாரையும் கத்தியால் குத்தியுள்ளார் அம்ருதா. இதைத் தொடர்ந்து அம்ருதா ஆண் நண்பருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். 

கதறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த உறவினர்கள் கத்தி குத்து வாங்கிய தாய் மகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தாய் இறந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரின் விசாரணையில் அம்ருதா அந்தமான் சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் அம்ருதா மற்றும் அவரது ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவ் இருவரையும் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

பிற செய்திகள்

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

294 views

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி : பிரதமர் மோடி பெயரில் போலி கணக்கு துவங்கிய நபர்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடியின் நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

55 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

29 views

முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை : காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

கொரனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி, நாளை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

14 views

ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.

8 views

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கொரோனா தொடர்பாக கேள்விகள் கேட்டு தண்டனை

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு போலீசார் விதவிதமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

114 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.