நிதிக் கொள்கையில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் 6 வது நிதிக் கொள்கை கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிதிக் கொள்கைகளே தொடரும் என்று அறிவித்தார். பணவீக்க சூழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முந்தைய வட்டி விகிதங்களே தொடரும் என்றும் குறிப்பிட்டார். தற்போது முக்கிய துறைகளில் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படுவதாகவும் சக்தி காந்த தாஸ் கூறினார். பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர் நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

