சினிமா பாணியில் பெண்ணை கடத்தி சென்று கட்டாய திருமணம்...

கர்நாடகாவில், சினிமா பாணியில் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சினிமா பாணியில் பெண்ணை கடத்தி சென்று கட்டாய திருமணம்...
x
ஹாசன் மாவட்டம் குடுகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் மனு. இவர் தனது உறவின பெண்ணான  கல்பஸ்ரீயை காதலித்து வந்ததுள்ளார். இந்நிலையில் மனுவின் நடவடிக்கைகளில் மாற்றங்களை கண்ட கல்பஸ்ரீ, அவருடன் பழகுவதை தவிர்த்துள்ளார். இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன் தையல் வகுப்பு சென்ற கல்ப ஸ்ரீயை காரில் கடத்தி சென்று மனு, தனது நண்பர்கள் உதவியுடன் கல்பஸ்ரீ கதற கதற தாலிகட்டினார். 

அதுதொடர்பான வீடியோவையும் சமூக வலைதளங்களில் அவர் பரவ விட்டுள்ளார். இது குறித்து அறிந்த போலீசார், வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்ப ஸ்ரீயை மீட்டனர்.  மனு, மற்றும் அவரது நண்பர்கள் வினய் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்