மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பல்வேறு திட்டங்கள் - தெற்கு ரயில்வேக்கு ரூ. 2,876 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வேக்கு 2 ஆயிரத்து 876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பல்வேறு திட்டங்கள் - தெற்கு ரயில்வேக்கு ரூ. 2,876 கோடி ஒதுக்கீடு
x
மத்திய பட்ஜெட் கடந்த ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை இன்று ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. 

* அதன்படி 2876 கோடி ரூபாய் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* குறிப்பாக புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாயும், அகல ரயில் பாதை திட்டங்களுக்கு 175 கோடியே 18 லட்சம் ரூபாயும் இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு 57 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* குறிப்பாக மதுரை - போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு 75 கோடியே 18 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* மதுரையில் இருந்து மணியாச்சி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 367 கோடி ரூபாயும், மணியாச்சியில் இருந்து  நாகர்கோவில் வரையிலான அகல ரயில் பாதை திட்டத்திற்கு 345 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


* திண்டிவனம் - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புதூர், ஈரோடு - பழனி, சென்னை - கடலூர், ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்​லை


* ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மட்டும் 2 கோடியே 70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்