"புதுச்சேரி பல்கலையின் ஃபார்ம் 3 சான்றிதழ் ஏற்கப்படாது" : சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நடந்த போட்டி தேர்வில், புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய ஃபார்ம் 3 சான்றிதழ் செல்லாது என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நடந்த போட்டி தேர்வில், புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய ஃபார்ம் 3 சான்றிதழ் செல்லாது என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி மாநில தேர்வர்களுக்கு, தேர்வாணையம் சார்பில் மின்னஞ்சல் அனுப்ப பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடற்தகுதி தேர்வு,ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்து, இறுதி பட்டியல் வெளியாக இருந்த நிலையில், இந்த அறிவிப்பு போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் அறிவித்துள்ளனர்.
Next Story

