புதுச்சேரி : உழவர்சந்தை ஊழியர்கள் திடீர் போராட்டம் - ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்

புதுச்சேரி உழவர் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 மாத நிலுவை சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி : உழவர்சந்தை ஊழியர்கள் திடீர் போராட்டம் - ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்
x
புதுச்சேரி உழவர் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 மாத நிலுவை சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன் காரணமாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்த காய்கறிகளை விவசாயிகள், விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் காய்கறிகளை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் வரை வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்