புதுச்சேரி சட்டக் கல்லூரியை, பல்கலை.யாக மாற்ற நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி, அரசு சட்டக் கல்லூரியை, சட்டப் பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, அரசு சட்டக் கல்லூரியை, சட்டப் பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா இன்று நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ள சுப்ரமணியம், இளந்திரையன், புகழேந்தி ஆகிய முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, சென்னை உயர் நீதிமன்ற கிளையை புதுச்சேரியில் திறக்க வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.
Next Story

