ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 வாகனங்களில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 7 குதிரைகளுடன் கூடிய மலையப்ப சுவாமி சிவப்பு பட்டுடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து சூரிய பிரபை வாகனத்தில் 4 மாடவீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து, மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 9 மணியளவில் சின்ன சேஷ வாகனம், 11 மணியளவில் கருட வாகனம், 1 மணியளவில் அனுமந்த வாகனம் என 7 வாகனங்களில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். பின்னர் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். 


Next Story

மேலும் செய்திகள்