பணய கைதிகளாக 20 குழந்தைகள், பெண்கள் சிறைபிடிப்பு : பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு

உத்தரபிரதேசத்தில் வீடு ஒன்றில், 20 குழந்தைகள் மற்றும் பெண்களை பணய கைதிகளாக சிறைபிடித்து வைத்திருந்த போதை ஆசாமியை, 8 மணி நேரமாக போராடி, போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பணய கைதிகளாக 20 குழந்தைகள், பெண்கள் சிறைபிடிப்பு : பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு
x
முகமதாபாத் நகரில் கார்தியா என்ற கிராமத்தில் சுபாஷ் கவுதம் என்ற குடிகாரர், தனது மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி, சில குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி அங்கு சென்ற 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை அவர் பணய கைதிகளாக பிடித்து வைத்து உள்ளார்.  கொலை குற்றவாளியான அவர், எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.பி. வரவேண்டும் என கூறியுள்ளார்.  இதையறிந்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற அந்த பகுதியை சேர்ந்த சதீஷ் சந்திரா துபே என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டார். சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, வெடிகுண்டும் வீசியுள்ளார்.  இதில் 3 போலீசார் மற்றும் கிராமவாசி ஒருவர் காயமடைந்தனர். மேலும், உடனடியாக இ​ங்கிருந்து வெளியேறாவிட்டால், மறைத்து வைத்துள்ள குண்டை வெடிக்கச் செய்வேன் என்று போலீசாரை, சுபாஷ் கவுதம் மிரட்டியுள்ளார். இதையடுத்து அதிரடியாக செயல்பட்ட போலீசார், அவனை சுட்டுக்கொன்றுவிட்டு, பணய கைதிகளாக இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதையறிந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு தலா 10 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்