சபாநாயகர் அதிகாரங்கள் : நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மணிப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மணிப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
சபாநாயகர் அதிகாரங்கள் : நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மணிப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
x
60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில், 21 இடங்களை பிடித்த பாஜக, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது. மேலும், பாஜகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சியாம் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சியாம் குமாரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கேம்சந்த் சிங்கிடம் காங்கிரஸார் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு, சியாம் குமார் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் 4 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தவறினால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு அளித்தனர். மேலும் சபாநாயகர் அரசியல் கட்சி சார்ந்தவராக இருக்கும் நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் முடிவு எடுப்பதில் அவரது அதிகாரங்களை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்