குஜராத் : சூரத் டெக்ஸ்டைல் சந்தையில் பயங்கர தீ விபத்து

குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள டெக்ஸ்டைல் சந்தையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் : சூரத் டெக்ஸ்டைல் சந்தையில் பயங்கர தீ விபத்து
x
குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள டெக்ஸ்டைல் சந்தையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. வணிக வளாகத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்ததாக தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்