டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் : யார் டெல்லி கில்லி..?
பதிவு : ஜனவரி 21, 2020, 04:11 PM
டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் 90 கட்சிகள் போட்டி போடும் நிலையில், மக்கள் எந்த கட்சிக்கு மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதே தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறகிறது. 

தலைநகரின் தேர்தல் களத்தில் 90-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் குதித்துள்ளன.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும்  பா.ஜ.க., நாட்டை  நீண்டநாட்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே பிரதானமாக போ​ட்டி நிலவுகிறது. 

பா.ஜ.க.  காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ் கட்சி,  தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. 

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மாநில  கட்சியாகத்தான் உள்ளது.

தேர்தல் ஆணையத்தில், பதிவு செய்யப்பட்ட 290 க்கும் மேலான கட்சிகள் உள்ள நிலையில்,  அவற்றில் 85 கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளமும், பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக உள்ள லோக் ஜனசக்தியும், தங்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ள சின்னத்தை இந்த தேர்தலுக்கு  ஒதுக்கித் தர  கோரிக்கை வைத்துள்ளன.

மும்முனை போ​ட்டி நிலவி வரும் நிலையில், 85 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இது மாதிரியான கட்சிகளுக்கு வெறும் நான்கு  சதவீதம் வாக்குகள் தான் கிடைத்தன.

மக்களாட்சியில் மக்கள் தான் மன்னர்கள் என்பது அடிப்படை. அந்த வகையில், யாருக்கு மக்கள் முடிசூட்டப் போகிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

780 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

426 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

124 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

13 views

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79 views

காலியாக உள்ள 18 மாநிலங்களவை இடங்கள் - வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

27 views

ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரமைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என நான்கு முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

144 views

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

158 views

மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்​ தூய்மைப்படுத்தப்பட்டது.

18 views

"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.