டெல்லியில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து

டெல்லியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து
x
டெல்லியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 14  தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த நிலையில்,  போக்குவரத்து துறையில் செய்த ஊழலை மறைக்க கெஜ்ரிவால் அரசு தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி முன்னாள் அமைச்சரும், பாஜக வேட்பாளருமான கபில் மிஸ்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவே கேஜ்ரிவாலின் தோல்விக்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்