செயல் தலைவர் ஜே.பி. நட்டா பா.ஜ.க. தலைவராகிறார் ? : இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல்

பா.ஜ.க.-வின் புதிய தேசியத் தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல் தலைவர் ஜே.பி. நட்டா பா.ஜ.க. தலைவராகிறார் ? : இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல்
x
தேசியத் தலைவராக உள்ள அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து ஓராண்டு ஆன நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவரது பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. கட்சியின் செயல்தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியின் விதிமுறைப்படி 50 சதவீத கட்சி அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கட்சியின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டாவின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. கட்சி அறிவிக்கும் நபரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், அவரே தேசியத் தலைவராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் காலை 10 மணிக்கு ஜே.பி.நட்டா பெயர் தலைவர்  பதவிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்