நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்கறிஞர் ஏ.பி. சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்

நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்குரைஞர் ஏபி சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்கறிஞர் ஏ.பி. சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்
x
நிர்பயா வழக்கில் குற்றவாளியான பவன் குமார் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ,  குற்றம் நடைபெற்ற 
போது தான் மைனராக இருந்ததாகவும்,  சிறார் நீதி சட்டத்தின் கீழ் தன்னை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி நீதிபதி சுரேஷ் குமார் கெய்ட் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நிர்பயாவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சீமா,  தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தவே  இந்த மனு  தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கீழமை  நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் அவர் வாதிட்டார். 

இதையடுத்து நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல், நீதிமன்ற நேரத்தை வீணடித்தமைக்காக, பவன் குமாரின் வழக்குரைஞர் ஏ.பி. சிங்குக்கு   25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்நிலையில் நிர்பயா குற்றவாளிக்கு ஆஜரான வழக்கறிஞர் ஏபி சிங்குக்கு தில்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்