"வட்டியுடன் ரூ. 1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும்" - தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு
பதிவு : ஜனவரி 17, 2020, 01:09 AM
மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை, ஒரு வாரத்திற்குள் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், பயன்படுத்தும், அலைக்கற்றை அளவிற்கு ஏற்ப உரிமம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த அலைக்கற்றையை பயன்படுத்தி, மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயும், இந்த கணக்கில் சேர்க்கப்பட்டு, அரசால் வசூலிக்கப்படும் என்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மொத்தமாக ஒரு லட்சம்  கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இதை எதிர்த்து, தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொகையினை செலுத்த வேண்டும் என்பதுடன், இது தொடர்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்ய கூடாது என கூறி தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததால்,15 தொலைதொடர்பு நிறுவனங்களும், வட்டியுடன், சேர்த்து 1 புள்ளி 47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டி உள்ளது. இதில் தற்பொழுது செயல்பாட்டில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு செலுத்த வேண்டி உள்ளது.

பிற செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.

15 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

11 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

7 views

ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது

ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது.

11 views

நாசா செல்ல விழுப்புரம் இளைஞர் தேர்வு - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில், வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாணவன், தான் அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

24 views

திருப்பதி கோவில் சொத்துக்கள் விவகாரம் - சுப்பிரமணிய சுவாமிக்கு, ரமண தீட்சிதர் "ட்வீட்"

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகளை அனைத்தையும் கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.