சபரிமலையில் மகரஜோதி தரிசனம் - ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
பதிவு : ஜனவரி 15, 2020, 11:20 PM
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ந் தேதி ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐய்யபனுக்கு அபிஷேகமும் , ஆராதனையும் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியாக  இன்று மாலை 6.45 மணி அளவில், ஜோதி வடிவாக ஐயப்பன், பொன்னம்பல மேட்டில்  பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்க கூடிய ஆபரணங்கள் சபரிமலையை அடைந்தது. 18 படிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவித்து பூஜைகள் செய்த உடன், ஐயப்பனை ஜோதி வடிவில் பக்தர்கள் தரிசித்தனர். ஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலை , பம்பை , நிலக்கல் , சன்னிதானம் போன்ற இடங்களில் பக்தர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிற செய்திகள்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

85 views

டைம்ஸ் இதழின் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியல் - பிரதமருடன் பெயர் பட்டியலில் இணைந்த 82 வயது மூதாட்டி

டைம்ஸ் இதழ் பட்டியலில் பிரதமர் உடன் மூதாட்டி ஒருவர் இடம்பிடித்து உள்ளார்.

11 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: "நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க.கோரிக்கை" -அ.தி.மு.க. உறுப்பினர் கருத்தில் உடன்பாடு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் தொடர்பான, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் கருத்தில் உடன்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

11 views

ஐ.நா. விருதுக்கு கேரள மாநிலம் தேர்வு

வாழ்க்கை முறை நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

237 views

உயிரிழந்த கொரோனா நோயாளியிடம் மோதிரம் திருட்டு - கேமராவில் சிக்கிய செவிலியர்...

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஷ்டியுட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் உடலில் இருந்து மோதிரத்தை செவிலியர் ஒருவர் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

3341 views

புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

228 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.