நிர்பயா வழக்கு - சீராய்வு மனு தள்ளுபடி - வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி

நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
டெல்லியில், கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 4 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில், குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனு  நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, இன்று பிற்பகல் 1.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்