"கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இடதுசாரி ஆதிக்கம்" - பிரதமர் மோடிக்கு பல்கலை. துணைவேந்தர்கள் உட்பட 200 பேர் கடிதம்
பதிவு : ஜனவரி 13, 2020, 07:22 AM
கல்வி நிலையங்களில் மாணவர் அரசியல் என்ற போர்வையில், இடது சாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடெங்கிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கல்வி நிலையங்களில் மாணவ அரசியல் என்ற போர்வையில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜாமியா முதல் ஜேஎன்யூ வரை சமீப காலமாக நடைபெற்று வரும் போராட்டங்கள், கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இடதுசாரி ஆதிக்கத்தையும், அதன் காரணமாக கல்வி சூழல் கெட்டுப்போய் இருப்பதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதனால்,  அன்றாட கல்வி செயல்பாடுகளும் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் பாதிக்கப்படுவதாகவும் அவர்களை தடம் மாற்றி அரசியல் போராளிகளாக மாற்றும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் கடிதத்தில் கூறியுள்ளனர். 

பிற செய்திகள்

"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு

இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

42 views

"இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி ரத்து" - மத்திய அரசு

வென்டிலேட்டர்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் முககவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகாரணங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

41 views

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

695 views

ஊரடங்கு உத்தரவால் "டிவி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு"

ஊரடங்கு உத்தரவால், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

124 views

தானியங்களை கொள்முதல் செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி - இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவு

நிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

18 views

"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.