"ராணுவ வீரர்களுக்கு எதிர்காலத்துக்கான பயிற்சி" - தலைமை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே
பதிவு : ஜனவரி 12, 2020, 02:06 AM
ராணுவ வீரர்களை, எதிர்காலத்துக்கான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, தலைமை ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே, ராணுவ வீரர்களுக்கு எதிர்கால பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார். முப்படைகளுக்கும் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கியதும், ராணுவ விவகாரங்களுக்கான துறையை உருவாக்கியதும் ஒருங்கிணைப்புக்கான  மிகப்பெரிய நடவடிக்கை என்று கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பெயரில் உறுதியுடன் இருப்பதாகவும், உறுதிமொழி எடுப்பதாகவும், இந்த சூளுரைதான் தங்களது அனைத்து நடவடிக்கைகளையும்,  அனைத்து சூழல்களிலும் வழிநடத்துகிறது என்றும் தலைமை ராணுவத் தளபதி கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.