குடியுரிமை சட்டத்திருத்தம் செல்லும் என அறிவிக்க கோரிய வழக்கு: "வன்முறை முடிவுக்கு வந்தால் மட்டுமே விசாரணை" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

குடியுரிமை சட்டதிருத்தம் செல்லும் என உத்தரவிடக் கோரிய வழக்கு உள்பட இதுதொடர்பான வழக்குகளை , நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைகள் நின்றால் மட்டுமே விசாரிக்க முடியும் என தலைமை நீதிபதி போப்டே அமர்வு தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தம் செல்லும் என அறிவிக்க கோரிய வழக்கு: வன்முறை முடிவுக்கு வந்தால் மட்டுமே விசாரணை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
x
குடியுரிமை சட்டதிருத்தம் செல்லும் என உத்தரவிடக் கோரிய வழக்கு உள்பட இதுதொடர்பான வழக்குகளை , நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைகள்  நின்றால் மட்டுமே விசாரிக்க முடியும் என தலைமை நீதிபதி போப்டே அமர்வு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம் செல்லும் என்று அறிவிக்கவும், அனைத்து  மாநிலங்களும் அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் டண்டா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. தற்பொழுது நாடுமுழுவதும் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், எங்களது நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு,  தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த மனுக்களை விசாரிப்பதன் மூலம் அமைதி சூழலை உருவாக்க முடியும் என தாங்கள் கருத முடியவில்லை என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்