"பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்
x
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. மூன்றில் இரண்டு பங்குக்கு மேலான கச்சா எண்ணெயை, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான், இந்தியா இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா, ஈரான் பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். உலக அரசியலில் ஏற்பட்டுள்ள ​சூழ்நிலை தொடர்பான இந்தியாவின் கவலை குறித்து கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா உள்ளதால், அங்கு நடைபெற்றுவரும் சூழ்நிலைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்