"ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்" - சிதம்பரம் கருத்து
பதிவு : ஜனவரி 08, 2020, 02:23 PM
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 4 புள்ளி 75 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்த நிலையில் நடப்பு அரையாண்டில் 5 புள்ளி 25 சதவீதத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கி உள்ளதாக பா.ஜ.க. அரசு கூறி வருவது அப்பட்டமான பொய் என்றும் சிதம்பரம் சாடியுள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் 3 புள்ளி 2 சதவீதத்தில் தான் வளர்ச்சி அடைந்த வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிமனித நிகர உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 3 சதவீதமாக உள்ள நிலையில், எந்தவித வருமான உயர்வும் இன்றி சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக  துணைவேந்தர் தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய  வேண்டும் என்றும் சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

பிற செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

9 views

"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.

61 views

"பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு"- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சதானந்த கவுடா விளக்கம்

தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

70 views

"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

62 views

"கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது" - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

59 views

சிங்கம்பட்டி குறுநில மன்னர் மறைவு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்

தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி, நேற்று இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.