"ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்" - சிதம்பரம் கருத்து
பதிவு : ஜனவரி 08, 2020, 02:23 PM
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 4 புள்ளி 75 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்த நிலையில் நடப்பு அரையாண்டில் 5 புள்ளி 25 சதவீதத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கி உள்ளதாக பா.ஜ.க. அரசு கூறி வருவது அப்பட்டமான பொய் என்றும் சிதம்பரம் சாடியுள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் 3 புள்ளி 2 சதவீதத்தில் தான் வளர்ச்சி அடைந்த வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிமனித நிகர உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 3 சதவீதமாக உள்ள நிலையில், எந்தவித வருமான உயர்வும் இன்றி சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக  துணைவேந்தர் தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய  வேண்டும் என்றும் சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

பிற செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை கூடாது - அர்ஜுன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .

438 views

"தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் வைக்கப்படும்" - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

1685 views

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

25 views

சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

100 views

"கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

157 views

"மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு" - ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டு, சட்டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.