ஐயப்ப பக்தர்களிடம் தகராறு செய்த ராணுவ வீரர்கள் : எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்த ரயில்வே போலீசார்
கேரளாவிலிருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஐயப்ப பக்தர்களிடம், இரண்டு ராணுவ வீரர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவிலிருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஐயப்ப பக்தர்களிடம், இரண்டு ராணுவ வீரர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து மதுபோதையில் வந்த ராணுவ வீரர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐயப்ப பக்தர்கள் திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சிகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களையும் விசாரணை செய்த ரயில்வே போலீசார், அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

