மூன்று தலைநகர திட்டத்திற்கு எதிர்ப்பு : மாறி மாறி காலில் விழுந்த விவசாயிகள் - போலீஸ் அதிகாரி
ஆந்திராவின் அமராவதி மாவட்டத்தில் விவசாயிகளின் காலில் துணை போலீஸ் சூப்பிரண்டு வீரா ரெட்டி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் அமராவதி மாவட்டத்தில் விவசாயிகளின் காலில் துணை போலீஸ் சூப்பிரண்டு வீரா ரெட்டி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் மூன்று தலைநகர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்திய போலீசாரின் காலில் விவசாயிகள் விழுந்துள்ளனர். இதையடுத்து, பதிலுக்கு போலீஸ் சூப்பிரண்டு வீரா ரெட்டியும் விவசாயிகளின் காலில் விழுந்து போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Next Story

