கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி : அனுமதி பெறாததால் போலீசார் தடுக்க முயற்சி
கர்நாடக மாநிலம் கோலாரில், அனுமதியின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கர்நாடக மாநிலம் கோலாரில், அனுமதியின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பாஜக தரப்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை கைவிட கோரி, போலீசார் பல முறை எச்சரித்தும், தடையை மீறி பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இப்போராட்டத்தில் கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

