"விண்வெளியில் பெற்ற வெற்றி ஆழ்கடலிலும் தொடரவேண்டும்" - பிரதமர் மோடி

விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பெற்ற வெற்றிகள் இப்போது ஆழ்கடலிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் பெற்ற வெற்றி ஆழ்கடலிலும் தொடரவேண்டும் - பிரதமர் மோடி
x
பெங்களூருவில்,107வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய  பிரதமர் நரேந்திர மோடி புதிய ஆண்டின் தொடக்கத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

தண்ணீர், எரிசக்தி, உணவு மற்றும் தாதுக்களை நாம் பொறுப்புடனும்  பயன்படுத்த வேண்டும் எனவும் பல திட்டங்கள்  மூலம் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வணிகத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத ஏற்றத்தை கடந்த 5 ஆண்டுகளில் பெற்றுள்ளதாகவும் மோடி அப்போது தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்பில், இந்தியாவின் தரவரிசை குறியீடென் முன்னேறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக உள்ளது எனவும் மோடி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்