இமாச்சலில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூன்ச் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இமாச்சலில் கடும் பனிப்பொழிவு
x
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூன்ச் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, இமாச்சலபிரதேச மாநிலம் லஹால் ஸ்பிடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால், அப்பகுதியே வெள்ளை போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.

சிம்லாவில் குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு

வட இந்தியாவின் மலை நகரமான சிம்லாவில்,  குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. 


சிம்லா நகரம் முழுவதும் பனியினால், வெள்ளைப் போர்வையால் மூடப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது. 
கடந்த 2 -3 நாட்களில், இமாச்சலப் பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில், 15 சென்டி மீட்டரிலிருந்து 90 செ.மீ வரை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவு காரணமாக, மூன்று தேசிய நெடுஞ்சாலையில், தற்காலிகமாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்த பனிப்பொழிவு இருப்பதால், சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்