நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு : தள்ளிப்போகும் தூக்கு
நிர்பயா பாலியல் வழக்கில், அக்ஷய் குமார் சிங் அளித்த மறு சீராய்வு மனு, டிசம்பர் 17-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விகேஷ்சிங், வினய்சர்மா, அக்ஷய் சிங், பவன்குமார் குப்தா ஆகிய 4 பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் 4 பேரில் வினய்சர்மா அளித்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற 3 பேர் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்ற வாரண்ட்டும் வழங்கப்பட்டது. வரும் 16-ஆம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அக்ஷய் சிங், தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது 17-ம் தேதி மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், தூக்கு தண்டனை மேலும் தள்ளிப்போகிறது.
Next Story