சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்
பதிவு : டிசம்பர் 06, 2019, 10:18 AM
கைலாசா பற்றிய பேச்சு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஆசிரமத்தில் இருக்கிறோம் என ஜனார்த்தன ஷர்மாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.
தன்னுடைய மகள்கள் 2 பேரை நித்தி தன் கட்டுப்பாட்டில் வெளிநாட்டில் அடைத்து வைத்திருக்கிறார் என ஜனார்த்தன ஷர்மா அளித்த புகாரே இந்த பிரச்சினைக்கெல்லாம் அடித்தளம். அதன்பிறகு தான் அடுத்தடுத்த புகார்கள் நித்தி மீது வந்து சேர்ந்தது. ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துதெரிவித்திருந்த 2 பெண்களும் தன் தந்தை பொய்யான அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்து இருந்தனர். 

இது ஒரு புறம் இருக்க ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்ச்சியில் ஆஜரான நித்தியும் அவ்வப்போது தன் மீதான புகார்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். ஈக்வெடார் நாட்டில் தன் மகள்களை  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நித்தி என்ற ஜனார்த்தன ஷர்மாவின் புகாருக்கு இதுவரை நித்தி வாய் திறக்கவில்லை. 

இந்த சூழலில் ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் தங்கள் கருத்துகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். நித்தியானந்தா தங்களுக்கு கடவுளுக்கு நிகரானவர் என கூறும் அவர்கள், மகிழ்ச்சியோடும், முழு விருப்பத்தின் பேரிலும் இங்கிருப்பதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆசிரமத்தில் நள்ளிரவில் பெண்களை எழுப்பி நகை அணிந்து கொண்டு நடனமாட சொன்னதாக ஜனார்த்தன ஷர்மா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அவர் மகள், 3 வருடங்களாக ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த என் தந்தை இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்காதது ஏன்? என வினவியிருக்கிறார். 

நித்தியானந்தா வெளிநாட்டுக்கு சென்ற போதெல்லாம் ஆசிரம பொறுப்பாளராக இருந்த தன் தந்தை இங்கு நடந்ததாக சொல்லப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்கலாமே? என எதிர் கேள்வி கேட்டுள்ளார். தன் தந்தையும் தாயும் தங்களைப் பற்றியும் ஆசிரமத்தை பற்றியும் சொல்வதெல்லாம் பொய் என்றும் பதில் கொடுத்துள்ளனர். 

காதல், ஆண் நண்பர் என டீன் ஏஜ் பெண்களுக்கு உரிய எந்த பிரச்சினையும் தங்களுக்கு இல்லை என்றும் மன நிறைவோடு ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினையை பொதுவெளியில் கொண்டு சென்று ஆதாயம் தேட முயற்சிக்கும் தன் தந்தை ஆபத்தான ஒரு நபர் என மகளே கூறுவது அதிர்ச்சியின் உச்சம் தான். 

இது ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தாவின் வலைதள பக்கங்கள் எல்லாமே டிரெண்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. கைலாசா பக்கத்தை ஆர்வமாக தேடும் மக்கள் அதனை சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். 

கைலாசா தொடர்பான மீம்ஸ்களும், அங்கு குடியேற என்ன வழி? கைலாசாவில் வெங்காயம் என்ன விலை? என சரமாரி கேள்விகள் கேட்டு கலகலப்பூட்டி வருகின்றனர். 


பிற செய்திகள்

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

8 views

கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது

போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

3 views

டெல்லி - கான்பூர் சென்ற ரயிலில் வெடிகுண்டு? - வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை

டெல்லியிலிருந்து கான்பூர் நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரசில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

5 views

"ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுக்க கோரிக்கை" : உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

6 views

நிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு

ப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

சோனியா உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு : டெல்லி அரசு, உள்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வெறுப்பு பேச்சு தொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேர் மீது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரிய வழக்கில், உள்துறை, டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.