"அந்தமான் பகுதிகளில் சீன கப்பல்கள் நடமாட்டம் அதிகரிப்பு" - கடற்படை தளபதி கரம்பீர் சிங் தகவல்
பதிவு : டிசம்பர் 04, 2019, 03:02 PM
அந்தமான் - நிக்கோபர் கடற்பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் கடந்த செப்டம்பரில் நுழைந்த கப்பல் ஒன்று விரட்டி அடிக்கப்பட்டதாகவும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடந்படை தளபதி கரம்பீர் சிங், அந்தமான் - நிக்கோபர் தீவு பகுதிகளில் அண்மைக் காலமாகவே, சீன கப்பல்களின் வருகை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், கடந்த செப்டம்பரில் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில் அத்து மீறி நுழைந்து போர்ட் பிளேயர் பகுதியில் ஆய்வு  மேற்கொண்ட சீன கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அனுமதி பெற வேண்டும் என்றும், அந்தமான் கடற்பகுதியில் 7 முதல் 8 கப்பல் காணப்படுவதாகவும்,  கடற் கொள்ளையர்களை கண்காணிக்கும் பணியிலும், ஆய்வு பணியிலும் ஈடுபடுவதாக தெரிவித்த கடற்படை தளபதி, சீனா செயற்கைக் கோளை ஏவும்போதும் சீன கப்பல்கள் இந்த பகுதியில் தென்படுவது வழக்கம் என்றும், தெரிவித்துள்ளார். கடந்த 2008-ல் இருந்தே அந்தமான் நிக்கோபர் பகுதியில், சீன கப்பல்கள் நடமாட்டம் இருந்து வருவதாகவும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை" - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பது நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

182 views

சொந்த ஊரில் அகமது ப​ட்டேல் உடல் நல்லடக்கம் - ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது ப​ட்டேல் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.

23 views

வேளாண் சட்டத்தை கண்டித்து விவசாயிகள் பேரணி - தடுத்து நிறுத்திய அரியானா போலீஸ்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி தொடங்கி உள்ளனர்.

13 views

மத்திய அரசை கண்டித்து ஒடிசாவில் பேரணி - ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்பு

மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

5 views

"தமிழக, புதுவை முதலமைச்சர்களுடன் பேசினேன்"- அமித்ஷா

தமிழக மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நிவர் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

12 views

நிவர் புயலின் தாக்கம் : "பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

262 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.