"ஜூன் -1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்" - உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:31 PM
வரும் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், இந்த திட்டம் அமலுக்கு வந்தால்,நாட்டிலுள்ள எந்த ரேஷன் கடையிலும், தங்களுக்கு உரிய உணவு பொருள்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.  சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலைபார்க்கும் தொழிலாளிகள், மற்றும் தினக்கூலிகளுக்கு இந்த திட்டம் உதவும் என தெரிவித்துள்ளார்.  அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் அடையாளம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு பொருள்கள் வழங்கப்படும் என்ற அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும் என்று கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.