"பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் தேவையில்லை" - வெங்கய்யா நாயுடு

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை களைய புதிய சட்டம் தேவையில்லை என்றும், திடமான முடிவு எடுக்கும் அரசு தான் தேவையென்றும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் தேவையில்லை - வெங்கய்யா நாயுடு
x
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை களைய புதிய சட்டம் தேவையில்லை என்றும், திடமான முடிவு எடுக்கும் அரசு தான் தேவையென்றும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் கொலை விவகாரம் மாநிலங்களவையில் இன்று எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது, எந்த ஒரு அரசும், கட்சியின் தலைவரும் தங்கள் மாநிலத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற வேண்டும் என  விரும்புவதில்லை என்றார்.  வெறும் சட்டங்களால் இத்தகைய குற்றங்கள் தடுக்க முடியாது என்றும், இதற்கு தீர்வுக் காண அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான ஆமி யாஜ்னிக்,  நாட்டின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சமூக புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும், அதனை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக நாடு இல்லை என தெரிவித்தார். வரும் 31 ஆம் தேதிக்குள் கைது  செய்யப்பட்ட நான்கு பேரையும் சாகும் வரை தூக்கில் இடவேண்டும் என்றும், அதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  காலம் தாழ்ந்து வழங்கும் நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்றும் விஜிலா சத்தியானந்த் சுட்டிக்காட்டினார். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவபர்களுக்கு தக்க தண்டணையை அரசு தர வேண்டிய தரூணம் இது என மக்கள் கருதுவதாக தெரிவித்த ஜெயா பச்சன், அந்த குற்றவாளிகளுக்கு மக்கள் மத்தியில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக புதிய சட்டங்கள் தேவையில்லை என்றும், அரசியல் திடம், நிர்வாகத் திறன், மனநிலையில் மாற்றம் மற்றும் சமூக கொடுமையை அழிப்பது ஆகியவை தான் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்