"அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம்" : ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்று, பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் : ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு
x
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அமித்ஷா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். சத்ரா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அமித்ஷா,பேசினார். அப்போது, அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்பதாக கூறிய அவர், அயோத்தியில் உறுதியாக ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சூளுரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்