"சபரிமலையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி" - கேரள அறநிலையத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
பதிவு : நவம்பர் 27, 2019, 10:33 AM
சமூக ஆர்வலர் திருப்தி தேசாயின் வருகையை வைத்து சபரிமலையில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் கூட்டு திட்டம் போடுவதாக கேரள அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து உள்பட 7 பேர் கொண்ட குழு கேரளா வந்துள்ளது. கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல அவர்கள்  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அமைதியாக நடைபெற்றுவரும் மண்டலபூஜை மகரவிளக்கு விழாவில் குழப்பத்தில் ஏற்படுத்தும் முயற்சி இது எனக் குற்றம்சாட்டினார். சபரிமலைக்கு வந்த பெண் மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்தது கண்டிக்கதக்கது என்றார். இந்த கும்பலுக்கு கேரள அரசு துணை நிற்காது எனவும் கேரள அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

"தமிழகத்தில் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து"

தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தியதாக தெற்குரயில் தெரிவித்துள்ளது.

41 views

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி

ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த‌ நிலையில் திடீரென மாயமானார்.

79 views

கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சுற்றும் சர்ச்சை - விழுப்புரத்தில் கைதான ஓவியர் வர்மா

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலை விமர்சித்தும், அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓவியர் வர்மா என்ற சுரேந்திரகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.

827 views

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 4,526 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

30 views

"கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடர்ந்து நகை கடன் வழங்க வேண்டும்" - கே. பாலகிருஷ்ணன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

47 views

"கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.