வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி 47

இந்தியாவின் கார்டோசாட்- 3 மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி 47
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் மையத்தில் இருந்து, காலை 9.28 மணி அளவில்,  பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.  உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கார்டோசாட் - 3  செயற்கைகோள், ஆயிரத்து 625 கிலோ எடை கொண்டது. புவியிலிருந்து 509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்வில் இது நிலை நிறுத்தப்பட உள்ளது. 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த செயற்கைகோள் புவி ஆராய்ச்சி மற்றும் ராணுவ ரீதியிலான பாதுகாப்புக்கு உதவிகரமாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

குறிப்பாக, கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வானில் மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல், எதிரிகளின் ராணுவ நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்