மண்டல பூஜை வழிபாடு - ஐயப்பன் விரதம் துவக்கம் : ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம்

மண்டல பூஜைக்காக அதிகாலை மூன்று மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மண்டல பூஜை வழிபாடு - ஐயப்பன் விரதம் துவக்கம்  : ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம்
x
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குபூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். கார்த்திகை 1 ஆம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐய்யப்பன் சுவாமிக்கு  தீபாராதணை காண்பிக்கப்பட்டது. பின்னர் சரண கோஷத்துடன் 18 படிகளின் வழியே சென்று நெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டனர். மண்டல பூஜைக்காக ஆயிரக்கணக்கான பக்கர்கள் சபரிமலையில் குவிந்துள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்