ராமஜென்ம பூமிக்கு செல்லும் பக்தர்கள் : பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன ?

கடுமையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு மற்றும் சோதனைகளுக்கு பிறகே, ஆயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமியை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன.. இப்போது பார்ப்போம்..
ராமஜென்ம பூமிக்கு செல்லும் பக்தர்கள் : பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன ?
x
அயோத்தியில் ஹனுமான் கடீ என்கிற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இராமர் பிறந்ததாக கருதப்படும்  இராம ஜென்ம பூமி. இந்த இடத்திற்கு பொதுமக்கள் சென்று தரிசிப்பது அத்தனை  எளிதானதல்ல. பல்வேறு இடங்களில் கடுமையான சோதனைகள், மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளை, கடந்தே அங்கு சென்று தரிசிக்க முடியும்.

இராம் ஜென்ம பூமி, மார்க் என்ற இடத்தில் இருந்தே, சோதனை கெடுபிடிகள் தொடங்குகின்றன. 

அதற்குமேல் பொதுமக்கள் செல்போனை கொண்டு செல்லவோ, அங்கிருக்கும் இடங்களை படம் பிடிக்கவோ அனுமதியில்லை. ஊடகங்களுக்கும் அங்கு அனுமதியில்லை. 

அங்கிருக்கும் சோதனைச்சாவடியில், செல்போன். இயர்போன்,சீப்பு,வாட்ச்,  உள்ளிட்ட உடைமைகளை ஒப்படைத்து விட்டு தான் செல்ல முடியும்.

அங்கிருந்து தொடங்கும் இரும்புக் கூண்டில் ஒற்றையடி வரிசையில் தான், பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டும்.

மார்க் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை கடந்து 30 அடிகள் நடந்தால், 2- வது சோதனை சாவடி வருகிறது. 

கிட்டத்தட்ட  ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இது போன்று 5 இடங்களில் சோதனைச்  சாவடிகளில், பொதுமக்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

5 அடிக்கு ஒரு ஆயுதம் ஏந்திய  மாநிலகாவல்துறையினரும், சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இப்படி பல்வேறு கடுமையான சோதனைகளை கடந்த தான் பக்தர்களை இராம் ஜென்ம பூமியை தரிசிக்க முடியும்.

Next Story

மேலும் செய்திகள்