கர்தார்பூர் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பதிவு : நவம்பர் 10, 2019, 08:28 AM
இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள கர்தார்பூர் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சீக்கிய குருவான குரு நானக்கின் நினைவிடம் பஞ்சாப் எல்லையையொட்டி பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ளது. இங்கு சீக்கியர்கள் சென்று வர வசதியாக இரு நாடுகளுக்கு இடையே 4 புள்ளி 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரு நாடுகளும் சாலை அமைத்துள்ளன.  இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருநானக் குருத்வாரா வரை இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பிரதமர் மோடி  திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவின் உணர்வுகளை மதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.

பிற செய்திகள்

சபரிமலையில் உணவு பொருள்கள் விலை நிர்ணயம் : கேரள அரசு அதிரடி நடவடிக்கை

சபரிமலை மற்றும் சுற்று வட்டார பகுதி உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலையை கேரள அரசே தீர்மானித்துள்ளது.

13 views

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்

மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

5 views

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.

5 views

6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்

ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 views

காணாமல் போன இந்திய இளைஞர் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

கடந்த 2017 ஆம் ஆண்டு காணாமல் போன ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 views

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை : அறிவிப்பு வெளியிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.