அயோத்தி தீர்ப்பை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பெருமிதம்

அயோத்தி தீர்ப்பு மூலம் இந்திய வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்
அயோத்தி தீர்ப்பை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பெருமிதம்
x
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலா உரையாற்றினார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்றும், நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த தீர்ப்பை தேசம் ஏற்று கொண்டுள்ளது என்றும்,  இந்திய வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என்றும் மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது என்றும் மோடி பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்