"நவ.10-ல் சோனியா தலைமையில் காங். செயற்குழு கூட்டம்"

பாஜகவுக்கு எதிராக அதிரடி வியூகம் : முக்கிய ஆலோசனை
நவ.10-ல் சோனியா தலைமையில் காங். செயற்குழு கூட்டம்
x
சோனியாகாந்தி தலைமையில், வருகிற 10 ம் தேதி, காங்கிரஸ் செயற்குழு, புதுடெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், எவ்வாறு பணியாற்றுவது? பிரியங்காவின் வாட்ஸ் அப்பில் உளவு வேலை பார்த்ததாக எழுந்த புகார் மற்றும் பாஜகவுக்கு எதிராக, தேசிய அளவில் எத்தகைய பிரசாரத்தை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர், வருகிற 18 ம் தேதி துவங்கும் சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூடுவது, தேசிய அரசியலில், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்