அயோத்தி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். எழுத்து பூர்வ ஆவணங்கள் இருந்தால் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
x
134 ஆண்டு பழமை வாய்ந்த அயோத்தி  ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமைஅமர்வு, விசாரித்து வந்தது. கடந்த 39 நாட்களாக யிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன நாள்தோறும் விசாரித்து வந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க இந்து அமைப்புகளுக்கு 45 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இன்று வழக்கு விசாரணை தொடங்கியதும் அயோத்தி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான மத்தியஸ்த குழு  தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் தமது தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான புத்தகம் ஒன்றை தாக்கல் செய்ய முயன்றார்.இதற்கு சன்னி வக்பூ வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அந்த புத்தகத்தில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், அதனை கிழிக்கவும் அனுமதி கோரினார். அப்போது, தலைமை நீதிபதி உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் என்று கூறினார். இதனையடுத்து அவர் புத்தகத்தை கிழித்தார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி, இந்த நீதிமன்றத்தின் மாண்பு கெட்டு போனதாகவும், இதுபோன்று நடக்க அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார். வழக்கறிஞர்கள் நடந்துகொண்ட விதத்தை எச்சரித்த தலைமை நீதிபதி, ஒருகட்டத்தில் இதே நிலை நீடித்தால், விசாரிக்காமல், வழக்கு விசாரணையில் இருந்து எழுந்து சென்று விடுவேன் என கோபமாக தெரிவித்தார்.ராம்லாலா விர்ஜமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பராசரன், இந்த இடத்திற்காக இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொள்ள ஏராளமான மசூதிகள் உள்ளதாகவும், அயோத்தியில் மட்டும் 55 முதல் 60 மசூதிகள் உள்ளதாகவும் பராசரன் சுட்டிக்காட்டினார். ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது என்றும், இந்த இடம் இந்துக்களுக்கு புனிதமானது என்றும் கே.பராசரன் வாதிட்டார்.இதனை தொடர்ந்து, வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன், அயோத்தியாவில் எத்தனை கோயில்கள் உள்ளது என எதிர் கேள்வி எழுப்பினார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், கடந்த 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் சன்னி வக்பு வாரியம், ராம்லாலா மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளுக்கு சமமாக நிலத்தை பிரித்து வழங்க வேண்டுமென தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். வரும் நவம்பர் 17ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற உள்ள நிலையில், நவம்பர் 14 முதல் 16-க்குள் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் ஆம் தேதி அமைத்த சமரசக் குழுவின் தலைவர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் குழு உறுப்பினர்களான வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிறீராம் பஞ்சு ஆகிய மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பிரச்சனையை தீர்க்க இவர்களின் பங்களிப்பு எந்த வகையில் அமைந்துள்ளது என்பது, வரும் காலங்களில் தெரிய வரும். தேசியப் பிரச்சனைகளில் தமிழர்களின் பங்களிப்பு சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து முக்கிய பங்காற்றி உள்ள நிலையில், 21 ஆம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கும், இந்த குழுவின் பங்களிப்பு இன்றியமையாததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்