பொருளாதார மந்தநிலை : ப.சிதம்பரம் புகார்

பொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே காரணம் என மத்திய அரசு மீது, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பொருளாதார மந்தநிலை : ப.சிதம்பரம் புகார்
x
பொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே காரணம் என மத்திய அரசு மீது, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார். ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ப. சிதம்பரம் தனது டுவிட்டர் வலைப்பதிவில், நாட்டில் தற்போது பொருளாதார மந்த நிலை, நிலவுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.  ஜி.எஸ்.டி.,யை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ள ப.சிதம்பரம்,  ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அவர் மறந்து விட்டார் என பதிவிட்டு உள்ளார். ஜி.எஸ்.டி., மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்ததாக தமது டுவிட்டர் பதிவில், ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்