இந்திய மற்றும் தமிழக பாரம்பரிய கைவினைப் பொருட்களை ரசித்த தலைவர்கள்
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:52 PM
பிரதமர் மோடி - சீன அதிபர் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய மற்றும் தமிழக பாரம்பரிய நுண்கலைகளை பறைசாற்றும் வகையிலான கண்காட்சியில் பிரதமர் மோடியும் சீன அதிபரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய மற்றும் தமிழக பாரம்பரிய நுண்கலைகளை பறைசாற்றும் வகையிலான கண்காட்சியில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் கலந்து கொண்டனர். கண்காட்சியில்,  சிற்பங்களை செதுக்குவது குறித்து சிற்பிகளின் செய்முறை விளக்கத்தை  இரு தலைவர்களும் ரசித்தனர்.  பல்வேறு வகையிலான, கல், மரச்சிற்பங்களை பார்வையிட்டதுடன், பட்டுத் துணி நெய்வதை பார்த்து ரசித்தனர். தமிழகத்தின் பாரம்பரிய பித்தளை குத்துவிளக்கு குறித்து ஜின் பிங் பிரதமர் மோடியிடம் ஆர்வமாக கேட்டறிந்தார்.


ஜின் பிங் உருவம் பொறித்த சிறுமுகை பட்டினை பரிசளித்த பிரதமர் மோடி 

கோவளம் பிஷர்மேன் கேவ் ஓட்டலில் நடைபெற்ற நுண்கலைகள் கண்காட்சியை  பார்வையிட்ட சீன அதிபர் ஜின் பிங்கிற்கு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறுமுகை பட்டினை பிரதமர் மோடி பரிசளித்தார். அதேபோல பிரதமர் மோடிக்கு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட சீன தட்டினை அதிபர் ஜின் பிங் பரிசளித்தார்.  இருவரும் தங்களது நினைவுப் பரிசுகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சீன அதிபரை வாசலில் காத்திருந்து வரவேற்ற பிரதமர் மோடி

கிண்டியில் இருந்து கோவளம் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த சீன அதிபர் ஜி- ஜின் பிங்கை பிரதமர் மோடி விடுதியின் வாசலில் காத்திருந்து வரவேற்றார்.

26 views

பிற செய்திகள்

"9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

17 views

ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு - தமிழகத்தில் 33 பேர் கைது

நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

45 views

"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு

வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

54 views

புதுக்கோட்டை : ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்

புதுக்கோட்டை அருகே கல்யாணபுரம் என்ற கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி மக்கள், ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

6 views

பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆயின.

262 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.